ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் இருந்து சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த கடலோர மீட்பு படையினர் உடனடியாக கடலுக்குள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த படகில் 47 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.