Monday, November 18, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூரியா உரத்தின் விலை மேலும் குறையும்

யூரியா உரத்தின் விலை மேலும் குறையும்

யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மஹா பருவத்தில் 10,000 ரூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 7,500-9,000 ரூபா வரை குறைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சீன அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளை வழங்கும் நிகழ்வை அவதானித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்குனுகொலபெலஸ்ஸ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெறுவதற்காக திரண்டிருந்த விவசாயிகளை அமைச்சர் சந்தித்து அவர்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோ ரி.எஸ்.பி அல்லது மண் உரம் வழங்க விவசாயத்துறை பரிந்துரைத்துள்ளதாகவும் அதே அளவு உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் பண்டி உரத்தின் விலை உயர்மட்டத்தில் உள்ளதால் அந்த உரத்தின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles