அரச ஊழியர்களுக்கு மேலதிக விசேட கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்த வருடத்தின் நான்காம் காலாண்டில் இதனை வழங்க ஆலோசிப்பதாக நிதி இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சண்டேடைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்தாலோசித்து பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்த பின்னர் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
கடன் மறுசீரமைப்புத் திட்டமும் நடைமுறையில் இருப்பதால், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.