Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'பரிப்புவா' மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது

‘பரிப்புவா’ மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது

வெல்லம்பிட்டிய-கொட்டுவில பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த மானவடுகே அசங்க என்று அழைக்கப்படும் “பரிப்புவா” என்பவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக கொலைக்கு திட்டமிட்டு உடந்தையாக இருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சாரதியும் கடுவெல-போம்பிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பொரளை பிரதேசத்தில் விட்டுச் சென்ற நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 28 மற்றும் 34 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும் இன்று (13) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles