Sunday, September 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் மீட்கப்பட்ட சிசுவின் தாயின் வாக்குமூலம்

ரயிலில் மீட்கப்பட்ட சிசுவின் தாயின் வாக்குமூலம்

ரயில் மலசலகூடத்தில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிசுவை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்து விட்டுச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (10) இரவு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் மலசலகூடத்தில் விடப்பட்ட நிலையில் குறித்த சிசு கண்டெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிசுவின் பெற்றோர் திருமணமாகாத தம்பதியினர் என கூறப்படுகிறது.

நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மின்கயா ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டெடுத்துள்ளனர்.

பின்னர் சிறுமியின் பெற்றோரை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தியதுடன், கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்தனர்.

சந்தேகநபரான தந்தை தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, தாயான பெண்ணுக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பில் தங்க ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த 25ம் திகதி குழந்தை பிறந்ததுடன், நேற்று ரயிலில் விடப்பட்டது.

பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles