சிறுமியொருவரை கொடூரமாக தாக்கிய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகமூன தாரகல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒன்றரை வயதான மகளை கொடூரமாக தாக்கியுள்ளார்.
சந்தேக நபரின் மனைவி வெளிநாட்டில் உள்ளதால், சிறுமியை கொடூரமாக தாக்கும் பல வீடியோ காட்சிகளை அவருக்கு அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் வேயங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்த மனைவியின் தாயார், சந்தேகநபர் சிறுமியை கொலை செய்வதாக மிரட்டியதாகவும், சந்தேக நபரும் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் தனது மகளை மிரட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் பகமூன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் குறித்த வீட்டுக்குச் சென்று தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மேலும் சிறுமியை பொலிஸார் காவலில் எடுத்துள்ளதாகவும், சந்தேக நபரின் முதல் மனைவி மற்றும் அவரது இரண்டு மகள்களையும் பொலிஸாரிடம் அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த நபரின் மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளார்.
இம்மாதம் அவர் பணம் அனுப்ப தாமதமானதால் சந்தேக நபர் சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளியை மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று ஹிகுராங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.