இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ மற்றும் கட்டமைப்புக் குறித்த முறைகேடுகள் தொடர்பில் கோப் குழு தமது முழுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.
சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்றுமதியாளர்கள்இ வங்கிகள்இ இறக்குமதியாளர்கள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் கோப் குழு முன்னிலையில் ஆஜராகியிருப்பதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதை எடுத்துக் காட்டியிருந்த கோப் குழுஇ பொறுப்புவாய்ந்த நிறுவனம் என்ற ரீதியில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு உதவிகள் வழங்கப்படாமை குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
நிறுவனம் சார் தகவல்கள் காணாமல் போனமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக உடனடியாக விசாரணை நடத்தூறு இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.
நிதியமைச்சுடன் இணைந்த உள்ளகக் கணக்காய்வாளரைக் கொண்ட ஒரு சுயாதீன குழுவை நியமித்து 3 வாரங்களுக்குள் இந்த நிறுவுனம் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பொது முகாமையாளரின் நடவடிக்கை குறித்து தனியான விசாரணை நடத்தி, ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையொன்றை அளிக்குமாறும் நிதி அமைச்சுக்கு உத்தரவு பிறப்பிக்க்பபட்டுள்ளது.
இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனது கூட்டுத் திட்டத்தை விரைவில் முன்வைக்க வேண்டும் என்பதுடன், கூட்டுத்தாபனத்தில் காணப்படும் 5 வெற்றிடங்களை உடனடியாக நிரப்பப்படுவதை உறுதிப்படுத்துமாறும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.