இன்னும் 3 வாரங்களில் அரச மருத்துவமனைகளில் 40 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.
மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த மருந்துகள் யாவையும் விரைவில் நாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அரச வைத்தியசாலைகளில் இரண்டு வகையான மருந்துகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.