எதிர்வரும் காலங்களில் எரிபொருளின் விலையை குறைக்க முடியும் என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து வருவதாக தெரிவித்தார்.
அண்மைய நாட்களில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதால் புதிய எரிபொருள் பங்குகள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் எரிபொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
விலை குறைப்பின் பலன் நுகர்வோருக்கு கிடைக்கும் எனவும், எரிபொருளின் விலையை குறைப்பது ஏனைய பொருட்களின் விலையை குறைப்பதற்கும் உதவும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.