Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிதுருதலாகல சரணாலயத்தில் வயோதிபர் சடலமாக மீட்பு

பிதுருதலாகல சரணாலயத்தில் வயோதிபர் சடலமாக மீட்பு

நுவரெலியா, பிதுருதலாகல சரணாலயத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் நேற்று காலை பிதுருதலாகல காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்று வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 72 வயதுடையவர் எனவும், சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles