இலங்கை மத்திய வங்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் இணையத்தளங்கள் முடக்கப்பட்டு முக்கியமான தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த இரண்டு இணையத்தளங்களும் முடக்கப்படவில்லை என்றும், மாறாக முடக்கப்படுவதற்கான எச்சரிக்கை மாத்திரமே வந்தத்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கெல்வின் செக்கியூரிட்டி என்ற தரவு முகவர் ஒன்றின் ஊடாக, இலங்கையின் முக்கியமான இரண்டு இணையத்தளங்களின் கடவு அனுமதி உள்ளிட்ட தரவுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதாக, FalconFeeds.io மார்ச் 2ஆம் திகதி அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஒரு நாளுக்கு முன்னதாகவே குறித்த இணையத்தளங்கள் முடக்கப்படவுள்ளதாக தகவல் வழங்கியமைக்கு அமைய, அதனை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதனை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேனல் நளின் ஹேரத் மறுத்துள்ளார்.
தமது இணையத்தளம் தாக்குதலுக்கு உள்ளாகப்போவதாக எச்சரிக்கப்பட்டபோதும், தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறவில்லை என்றும் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இணையத்தள தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்க மேலும் முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தினத்தில் தமது இணையத்தின் மீது தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை என்று மத்திய வங்கியின் அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளார்.