Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு போசணை குறைபாடு

கொழும்பில் 5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு போசணை குறைபாடு

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் இந்த ஆண்டு போசாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அண்மையில் (07) நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்இ இரண்டு வயது முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எடை குறைந்தவர்களின் சதவீதம் இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், யுனிசெப்பின் அனுசரணையுடன் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட முன்பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles