களனி பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக கைது செய்யப்பட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நேற்று மஹர நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் ஹர்ஷன திஸாநாயக்க ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, குறித்த 6 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.