Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனா கமகேவுக்கு எதிரான மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

டயனா கமகேவுக்கு எதிரான மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என கோரி இறுதி விசாரணையின் போது நீதிமன்றில் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.

ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்து மூலமான அறிக்கைகளை மார்ச் 27 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு, மனுவை ஏப்ரல் 3 மற்றும் 4ம் தேதிகளில் விசாரிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால், அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என மனுதாரர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, சட்டத்துக்கு முரணான வகையில் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்திருப்பது சட்ட விரோதமானது என்றும், அந்த பதவியில் இருந்து செல்லாது என அரசாணை பிறப்பிக்கவும் மனுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles