Wednesday, April 23, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் பறிமுதல்

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான இலத்திரனியல் சாதனங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவற்றில், தொலைக்காட்சிகள் மற்றும் வளிசீராக்கிகள் போன்றன அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களாக, இந்த இலத்திரனியல் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இலத்திரனியல் பொருட்களில் 68 தொலைக்காட்சிகள், 77 வளிசீராக்கிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயர்கள் என்பன உள்ளடங்குவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் இந்த இலத்திரனியல் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ். வீரசிறி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles