Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்யத் தாக்குதலால் அழிக்கப்பட்ட நகரம் - புகைப்படத்தை வெளியிட்ட யுக்ரைன்

ரஷ்யத் தாக்குதலால் அழிக்கப்பட்ட நகரம் – புகைப்படத்தை வெளியிட்ட யுக்ரைன்

யுக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக யுக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது.

யுக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது.

மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

யுக்ரைனின் உள்கட்டமைப்புகள் படுபயங்கரமாகச் சேதப்படுத்தப்பட்டன.

ஆனாலும், இன்னும் யுக்ரைன் – ரஷ்யா இடையே எந்தச் சமாதான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், யுக்ரைன் வெளியிட்டிருக்கிற அதிர்ச்சியூட்டும் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

யுக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக யுக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது.

அந்தப் புகைப்படம் ரஷ்ய இராணுவம் யுக்ரைனை எந்த அளவு சேதப்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

இது குறித்து யுக்ரைன் வெளியுறவு அமைச்சு ட்விட்டரில், ’10இ000 பேர் தங்கியிருந்த டொனெட்ஸ்கிலுள்ள மரிங்கா நகரம் இப்போது எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன.

மீண்டும் மீண்டும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதன் விளைவாக தற்போது வீடுகளின் இடிபாடுகள் குப்பைகளால் சூழப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவின் போர்க்குற்றவாளிகள் அதைத் தரைமட்டமாக்குவதற்கு முன்பு வரை அது அமைதி நகரமாகவே இருந்தது’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles