எரிவாயு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“லிட்ரோ நிறுவனம் அறிவித்தபடி தற்போது ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது. ஏப்ரல் 4 அல்லது 5 ஆம் திகதிக்குள் எரிவாயுவுக்கான பற்றாக்குறை நீங்கும் என அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். எனினும் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரிக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.