இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களை இத்தாலியில் வேலைக்கு சேர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 82,702 பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, ட்ரக் டிரைவர்கள், கட்டுமானம் மற்றும் ஹோட்டல் தொழில், இயந்திரவியல் மற்றும் மின்சாரம், தொலைத்தொடர்பு, உணவுத் தொழில், கப்பல் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.