இலங்கையில் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் விநியோகிப்பதற்கு டீசல் கையிருப்பில் இல்லை.
இந்த நிலையில் அவசர தேவைகளுக்காக இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திடம் (LIOC)இருந்து 6000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
அமைச்சர் காமினி லொக்குகே இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை (31) இந்திய கடன் எல்லை திட்டத்தின் கீழ் ஒருதொகை எரிபொருள் அடங்கிய கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.