உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் டொலருக்கு வாங்கினார்.
இத்தளத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர், அதில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்.
அதற்கமைய, அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 200 ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்திருந்தார்.
அதில் கணினி பொறியாளர்கள், மேலாளர்கள், கணினி வல்லுநர்கள், உதவியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் எலான் மஸ்க்கையும், அவரது நிறுவனத்தையும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், ட்விட்டரின் மாற்றுத்திறனாளி ஊழியரொருவர் தான் பணியில் நீடிக்கிறேனா இல்லையா என்பதை தெளிவுபடுத்துமாறு போட்ட ட்வீட்டிற்கு அவரது மாற்றுத்திறனை சுட்டிக்காட்டிய எலான் மஸ்க், அதனை குறையாக சுட்டிக்காட்டி அவர் பணியாற்றவில்லை என குறிப்பிட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார் எலான் மஸ்க்.
அதில், ஹல்லியின் நிலைமையை தவறாகப்புரிந்து கொண்டதற்காக நான் அவரிடம் மன்னிப்புக்கேட்க விரும்புகிறேன். அவர் ட்விட்டரில் நீடிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.