உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனை தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் மாதம் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த உகந்த தினம் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (07) அறிவித்தது.