Monday, August 4, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதப்பிச் சென்ற கைதி சுட்டுக் கொலை

தப்பிச் சென்ற கைதி சுட்டுக் கொலை

கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் கைதி ஒருவர் இன்று அதிகாலை 02:45 மணியளவில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

காயமடைந்த அவர், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கேகாலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்புல்கொட வத்த மல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான எம்.அஜித் குமார என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நபர், சிறைச்சாலைக்கு வெகு தொலைவில் உள்ள மாநகர சபை கட்டிடத்திற்கு அருகில் உள்ள காணியில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, சிறைச்சாலை அதிகாரிகளால் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது கால் மற்றும் கையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles