Monday, August 4, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்த தலைமையில் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடல்

மஹிந்த தலைமையில் மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது மூன்று பிரதான விடயங்களை முன்வைத்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார மீட்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles