Monday, August 4, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

சிறையில் உள்ள சோத்தி உபாலி என்பவரின் மகனின் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் வெலிக்கடை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சோத்தி உபாலி என்பவரின் மகனுடன் நெருங்கிய நண்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles