Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி மரணம்

ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி மரணம்

ஹுங்கம – கஹந்தமோதர, முகத்துவாரம் பகுதியில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹந்தமோதர முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் பயணித்த மூன்று ரஷ்யர்களில் ஒருவர் முகத்துவாரத்தில் இறங்கிய பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக விடுதி ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்ய பிரஜையான செர்பினன் பெட்ஸி என்ற 44 வயதுடைய நபரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இந்த ரஷ்ய நாட்டவர் கஹந்தமோதர பிரதேசத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தனது சகோதரனுடனும் மற்றுமொரு ரஷ்ய பெண்ணுடனும் கடற்கரையில் நடந்து சென்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles