Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படாதிருக்க நடவடிக்கை

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படாதிருக்க நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் அதில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இன்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை சரியான நேரத்தில் நடத்த முடியாவிட்டால், தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு அரசாங்க ஊழியர்களுக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில், நிறுவனங்களின் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளுடன் இணைந்துள்ள பல்வேறு அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெருமளவிலான ஊழியர்கள் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் விரிவான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles