Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாமென அறிவிப்பு

யாழ். மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாமென அறிவிப்பு

யாழ்ப்பாணத்தின் தொல்லியல் அடையாளங்களில் ஒன்றான மந்திரிமனை பாதுகாப்பற்றதாக இருப்பதால் உள்ளே செல்ல வேண்டாம் என்று தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் அரசனின் அமைச்சரின் வாசஸ்தலமாக இது பயன்படுத்தப்பட்டது என்று கருதப்படுகின்றது.

ஆனால் பின்னாட்களில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஐரோப்பியர் காலத்தில் இந்த மந்திரிமனை திருத்தி அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகின்றது. எனினும் 1890ஆம் ஆண்டில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டதாக இந்தக் கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

130 வருடங்களுக்கு மேற்பட்ட இந்த மந்திரிமனை பராமரிப்பின்றிக் காணப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் இந்தக் கட்டிடத்தை பாதுகாக்க தொல்பொருள் திணைக்களம் கம்பிகளைப் பொருத்தியது. அந்தப் பணியும் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே ‘கட்டிடம் பாதுகாப்பற்றதாக இருப்பதால் உள் நுழைய வேண்டாம்’ என்று அறிவித்தல் பலகையை தொல்பொருள் திணைக்களம் தற்போது காட்சிப்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles