திருகோணமலை ஸ்ரீலங்கம டிப்போவில் இன்று காலை 7 மணி முதல் நிர்வாகப் பிரச்சினை காரணமாக அனைத்து பேருந்துகளும் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.
டிப்போ முகாமையாளரின் தன்னிச்சையான நடவடிக்கையே வேலை நிறுத்தத்துக்கு வழிவகுத்ததாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் 37 பேருந்துகள் இயங்கிய நிலையில் இன்று 20 பேருந்துகளே இயங்குவதாகவும் எஞ்சிய பேருந்துகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள போதிலும் சிறிய பழுதுகளுடன் இந்தப் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பாடசாலை சேவை மற்றும் இரவுப் பயணங்கள் மற்றும் கிராமப்புறப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகள் இயங்காத காரணத்தினால் ஊழியர்களை இடமாற்றம் செய்யத் ஆரம்பித்துள்ளனர்.
இலாபத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கா டிப்போவை வழமைக்குக் கொண்டு வரக் கோரி, அனைத்து நடத்துனர்கள், சாரதிகள் இன்று (07) சேவையிலிருந்து வெளியேறினர்.