பாணந்துறையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் கழிவறை குழியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் கொலை செய்யப்பட்டு கழிவறை குழிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
குறித்த விடுதியின் உரிமையாளர் செய்த முறைப்பாடுக்கமைய, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விடுதி முகாமையாளர் சில நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்ணை கொழும்பில் இருந்து அழைத்து வந்ததாகவும், மேலும் இரண்டு ஊழியர்களுடன் பல சந்தர்ப்பங்களில் அவர் நெருங்கிய தொடர்பை பேணியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.