Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் நாளை பணிப்புறக்கணிப்பு

அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் நாளை பணிப்புறக்கணிப்பு

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை (08) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

சுகாதார சேவையில் 15 சதவீத சம்பள வெட்டு மற்றும் சேவையை பேணுவதற்கு தேவையான மருந்துகளை வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கையை இரத்துச் செய்ய வேண்டும் என கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தக் கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு பதிலளிக்காவிட்டால் நாளை (08) காலை 8 மணி முதல் 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சுகாதார சேவை சங்கங்களும் இணைந்து கையொப்பமிட்டு நேற்று (06) சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles