இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மக்கள் எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்காக இரவு பகலாக நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல அரசியல்வாதியின் மகன் 35 மில்லியன் ரூபா பெறுமதியான ஓவியமொன்றை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஓவியம் நாட்டில் உள்ள செல்வந்தர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தை வாங்கியவரின் தந்தை, நாட்டில் அதிகாரமிக்க பதவியில் இருப்பவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.