ஆப்கானிஸ்தானில் உள்ள தாடி இல்லாத அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தலிபான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதுள்ள மதச்சட்டங்களின்படி தாடி இருக்க வேண்டும் என அரச ஊழியர்களுக்கு பலமுறை கூறியுள்ள நிலையில், நேற்று (28) முதல் அந்த விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தலிபான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, தாடி வளர்க்காத ஊழியர்களுக்கு பணியிடத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.