Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்வெனிஸ் நகரில் வறண்டு போன கால்வாய்கள்

வெனிஸ் நகரில் வறண்டு போன கால்வாய்கள்

இத்தாலியின் வெனிஸ் நகரம் கால்வாய்களுக்கும் படகு சவாரிகளுக்கும் பெயர்பெற்றது.

ஆனால், தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெனிஸ் நகரின் கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு, படகுகள் அனைத்தும் சேற்றுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன.

வெனிஸ் நகர கால்வாய்களில் நுழைந்து செல்லும் படகுகள் ரசிக்கத்தக்கவை.

அந்நகரின் பெரும்பாலான போக்குவரத்து சேவை படகுகள் மூலமே இடம்பெற்ற நிலையில், தற்போது நகர மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெனிஸ் நகரை சுற்றியிருந்த 150 கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டுபோனதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பணியிடங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் செல்ல மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

பலரும் தங்கள் இருப்பிடங்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சிலர் சேற்றில் இறங்கி, குறைந்த தொலைவுக்கு இயக்கப்படும் படகுகளில் சென்று மீண்டும் சேற்றில் இறங்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வறட்சிக்கு மழையின்மை, வெப்பநிலை அதிகரிப்பு, கடல் மட்டம் தாழ்ந்தமை, ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பெய்த பனிப்பொழிவின் அளவு குறைந்தமை என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

வழமையாக அதிக வௌ்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் வெனிஸ் நகரம் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles