Friday, April 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்இந்தோனேசியாவிலும் மெக்சிகோவிலும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவிலும் மெக்சிகோவிலும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று(2) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்திற்கு அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை, மெக்சிகோவின் ஒக்ஸாகாவில் ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles