Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு டீசல் பகிர்ந்தளிக்க நடவடிக்கை

விவசாயிகளுக்கு டீசல் பகிர்ந்தளிக்க நடவடிக்கை

சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய டீசலை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 6.98 மில்லியன் லிற்றர் டீசலை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த டீசல் இம்முறை பெரும்போகத்தில் அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, ஒரு ஹெக்டேருக்கு 15 லிற்றர் டீசல் வழங்கப்படவுள்ளது.

இதனை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கான டோக்கன்களை அனைத்து விவசாய சேவை மத்திய நிலையங்களிலும் விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles