Monday, August 4, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாம்பழம் திருடிய நால்வர் கைது

மாம்பழம் திருடிய நால்வர் கைது

சூரியவெவ – மதுனாகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழ தோட்டத்திற்குள் புகுந்து சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான மாம்பழங்களைத் திருடியது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு சந்தேக நபர்களும் கடந்த 27ஆம் திகதி மாலை 6 மணியளவில் காரில் வந்து மாம்பழத்தோட்டத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பண்ணை உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சூரியவெவ மற்றும் ஹொரணை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles