சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து 95 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அத்துடன், அண்மையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், இந்த அறிக்கை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் அதனை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.