Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்குகளை தொடர முடியாது!

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்குகளை தொடர முடியாது!

முன்னாள் நிதி அமைச்சர், ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் இரண்டு மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் தொடர முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு நேற்று அறிவித்தது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29, 31 ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிணைமுறி ஏலங்களில் அரசாங்க நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி குறித்த இரண்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ரவி கருணாநாயக்கவினால் மேல் நீதிமன்றத்தின் இரண்டு வழங்குகளையும் ஆட்சேபனைக்கு உட்படுத்தி, முன்வைத்த இரண்டு எழுத்தாணை மனுக்கள் மீதான தீர்ப்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, தம்மிக்க கனேபொல ஆகியோர் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles