கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் முதன்மை பணவீக்கம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரியில் சிறிதளவு குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரியில் 51.7% ஆக இருந்த முதன்மை பணவீக்கம் பெப்ரவரி இறுதிக்குள் 1.1% ஆல் குறைந்து 50.6% ஆக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், ஜனவரியில் 60% ஆக இருந்த உணவு பணவீக்கம், பெப்ரவரியில் 54.4% ஆகக் குறைந்துள்ளது. ஒப்பீட்டளவில் இந்த பணவீக்கம் 5.6% ஆல் குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனவரி மாதத்தில் 47.9% ஆக பதிவான உணவு அல்லாதவற்றின் பணவீக்கம் பெப்ரவரயுடன் உடன் ஒப்பிடுகையில் 0.9 சதவீத்தினால் அதிகரித்து, 48.8% ஆக பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.