மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கிண்டல் செய்யாமல் மக்களின் இறையாண்மையை பாதுகாக்க ஜனாதிபதி செயற்பட வேண்டுமென விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார்.
நேற்று (28) இடம்பெற்ற சுதந்திர மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையை 1.1 பில்லியன் ரூபாவாக குறைக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.