Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடொலர் விலை 450 ரூபா வரை அதிகரிக்கலாம்

டொலர் விலை 450 ரூபா வரை அதிகரிக்கலாம்

இலங்கையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிழையான தீர்மானங்களாலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள வடமேல் பல்கலைக்கழக வர்த்தக துறை சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்திசில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும் அரசாங்கம் தமது அரசியல் நோக்கங்களுக்காக வீதி அபிவிருத்தி போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறது.

பொருளியல் நிபுணர்களின் ஆலோசனையை மறுத்து பாதீட்டின் ஊடாக அரச வருமானம் குறைக்கப்பட்டமை போன்றன மோசமான தீர்மானங்களாகும்.

இந்த நிலையில் நாட்டில் டொலர் ஒன்றின் பெறுமதி 450 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles