கடந்த ஆண்டு இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்தது.
உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் உப தலைவர் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கையை வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரியும் பெருமளவிலான பெண்கள் வேலையிழந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அறிக்கையின்படி, 2021 மற்றும் 2022 க்கு இடையில் இலங்கையில் வறுமை 13% இலிருந்து 25% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஏழைகள் என வகைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைச் செலவு 65% ஆகவும், ஏழைகள் அல்லாதவர்களின் வாழ்க்கைச் செலவு 57% ஆகவும் அதிகரித்துள்ளது.
தற்போதுள்ள உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்கனவே அதிகரித்துள்ளதைக் குறிப்பிடும் அறிக்கை, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 2021 இல் 7.4% இல் இருந்து 2022 இல் 9.2% ஆக அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.