தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் விடயத்தில் தமக்கும் தலையிட சட்ட ரீதியான ஏற்பாடுகள் இல்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கும் விடயத்தில் தலையிடுமாறு கோரிஇ தேர்தல்கள் ஆணைக்குழு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தது.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தேர்தல் நிதியொதுக்கம் குறித்து கட்சி தலைவர்களே முடிவு செய்ய வேண்டும். நான் தலையிட எந்த சட்ட விதிகளும் இல்லை.
பாதீட்டை நிறைவேற்றியதுடன் பாராளுமன்றத்தின் கடமை முடிந்துவிட்டது.
அதன் பிறகுஇ பணத்தை பகிர்வது குறித்து திரைசேறியே தீர்மானிக்க வேண்டும். அந்தந்த காலத்தில் சேகரிக்கப்பட்ட வருமானத்தைப் பொறுத்து திரைசேறி அதைச் செய்ய வேண்டும். அதுதான் நிலைப்பாடு.
அதற்கு அப்பால் எதுவும் நடக்க வேண்டும் என்றால் அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துப்படி நடக்க வேண்டும்.
அதிகாரம் ஒன்று அல்லது இரண்டு எம்.பி.க்களுக்கு அல்ல. முழு நாடாளுமன்றத்திற்கே உள்ளது.
அதற்கும் சபாநாயகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், எம்.பி.க்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.