Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். பல்கலையில் மோதல்: அறுவர் வைத்தியசாலையில், ஒருவர் கவலைக்கிடம்

யாழ். பல்கலையில் மோதல்: அறுவர் வைத்தியசாலையில், ஒருவர் கவலைக்கிடம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் இருதரப்பு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் கலைப் பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று (25) முதல் குறித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக மைதானத்தை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 24ஆம் திகதி இரவு கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் குழுவொன்று இரண்டாம் வருட மாணவர்கள் ஆறு பேர் மீது தடியடி நடத்தியதில் காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாணவர்களில் ஒருவருக்கு தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த அடிபட்டுள்ளதாகவும், மாணவி கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles