உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு தாம் எதிரானவர் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை நடத்துவது ஜனாதிபதியின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
எந்த நேரத்திலும் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறோம்.
இந்த அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெறுமா என்பதில் உறுதியாக இல்லை, அதனால்தான் தேர்தலை ஒத்தி வைத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.