Thursday, August 7, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசுக்குச் சொந்தமான காணி வெளிநாட்டவருக்கு குத்தகை: உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர் கைது

அரசுக்குச் சொந்தமான காணி வெளிநாட்டவருக்கு குத்தகை: உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர் கைது

புத்தளம் – மஹகும்புக்கடவல – வல்பலுவ பிரதேசத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியை வெளிநாட்டவருக்கு குத்தகைக்கு வழங்கி 24 மில்லியன் ரூபாவுக்கு மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பொதுஜன பெரமுனவின் ஆனமடுவ உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் 50 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியை வெளிநாட்டவருக்கு வழங்கி 24 மில்லியன் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் பலரிடம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles