Monday, August 11, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகே உட்பட 57 பேர் விளக்கமறியலில்

வசந்த முதலிகே உட்பட 57 பேர் விளக்கமறியலில்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை, திறக்குமாறு வலியுறுத்தி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நேற்று பிற்பகல் கல்வி அமைச்சுக்கு சென்றனர். இதன்போது, கல்வி அமைச்சின் வளாகத்தில், அமைதியற்ற நிலை ஏற்பட்டதையடுத்து 57 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles