Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8400 மில்லியன் ரூபா நீர் கட்டணம் நிலுவையில்

8400 மில்லியன் ரூபா நீர் கட்டணம் நிலுவையில்

நீர் கட்டணம் செலுத்துவது 40% குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

8400 மில்லியன் ரூபா நிலுவை கட்டணத்தை நுகர்வோரிடமிருந்து அறவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 6200 மில்லியன் ரூபா கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்படாமையால் சபையின் நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles