தற்பொழுது நாட்டில் பரவலாக மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிக்கப்படுகிறது.
தற்பொழுது மின்பிறப்பாக்கிகள் கொண்டு நீர் விநியோக பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் காரணமாக செலவு அதிகரித்து இருப்பதுடன், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் குறித்த மின்பிறப்பாக்கிகள் இயங்குவதில் சிக்கல் இருக்கிறது.
எனவே பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.