Sunday, December 21, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் தொடர்பான முடிவு இன்று

தேர்தல் தொடர்பான முடிவு இன்று

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 09 ஆம் திகதி நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக இலங்கை தேர்தல் ஆணைக்குழு இன்று கூடுகிறது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே ஆணைக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜி.புஞ்சிஹேவா உறுதியளித்துள்ளார்.

அண்மையில் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் ஐவரும் பங்குபற்றிய ஊடகவியலாளர் சந்திப்பில், இது அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலுக்குத் தேவையான அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களிலும் அவர்கள் ஐவரும் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உள்ளூராட்சி தேர்தல், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles